Type Here to Get Search Results !

2026 TNPSC Group 4 Study Material

(151 to 200) ஆகஸ்ட் 2026 நடப்பு நிகழ்வுகள் Quiz

ஆகஸ்ட் 2026 Current Affairs – Part 4 – Questions 151-200
ஆகஸ்ட் 2026 – CURRENT AFFAIRS
Part 4 | Questions 151–200 | TNPSC Group 2 & Group 4
Q151தற்போது அர்ஜுனா விருது எத்தனை விளையாட்டு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
சரியான விடை: C. 17
விளக்கம்: தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர், செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக் உள்பட 17 பேருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது.
Q152இலவச மருத்துவ காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து எவ்வளவு தொகையாக உயர்த்தப்பட்டுள்ளது?
சரியான விடை: D. ரூ.25 லட்சம்
விளக்கம்: தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை உயர்த்தப்படும் என விதி 110 இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Q153'முதல்வரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்' எத்தனை கோடியில் மேம்படுத்தப்படுகிறது?
சரியான விடை: A. ரூ.673.44 கோடி
விளக்கம்: 5 மண்டல புற்றுநோய் மையங்கள் தஞ்சாவூர், கோவை, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும்.
Q154பண்டைய தமிழர்களின் கல்வெட்டுகளை எளிதாக புரிந்துகொள்ள ஏஐ தரவுத் தளம் எத்தனை கோடியில் உருவாக்கப்படவுள்ளது?
சரியான விடை: B. ரூ.2 கோடி
விளக்கம்: 76 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் ரூ.49 கோடியில் புனரமைக்கப்படுகின்றன.
Q155பொருத்துக. அகழ்வைப்பகம் மற்றும் மாவட்டங்கள்:
1) தொல்பழங்கால அகழ்வைப்பகம் — தருமபுரி
2) நாட்டுப்புற அகழ்வைப்பகம் — திருவள்ளூர்
3) நடுகல் அகழ்வைப்பகம் — குற்றாலம்
சரியான விடை: A. 231
விளக்கம்: இவைகள் அனைத்தும் ரூ.12 கோடியில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படும்.
Q156தமிழர் நாகரிக அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
சரியான விடை: C. திண்டுக்கல்
விளக்கம்: 23 மாவட்டங்களில் தற்போது செயல்படும் அருங்காட்சியகங்கள் நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி, அரியலூர் உள்பட 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும்.
Q1572026 இல் இந்தியாவின் தனிமனித சராசரி ஆயுட்காலம் எத்தனை?
சரியான விடை: D. 72
விளக்கம்: 1947 இல் இந்தியாவின் தனிமனித சராசரி ஆயுட்காலம் 32 ஆகும்.
Q158கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்க எத்தனை கோடியில் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது?
சரியான விடை: B. ரூ.200 கோடி
விளக்கம்: தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டம் மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
Q159அண்ணா மறுமலர்ச்சித் திட்டமானது எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
சரியான விடை: A. தமிழக அரசு வளர்ச்சித் திட்டம்
விளக்கம்: கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் பெயரை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றி, அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று உயர்த்தப்பட்டுள்ளது.
Q160‘Belonging: A journey of Love’ என்ற சுயசரிதை நூலை எழுதியவர் யார்?
சரியான விடை: B. சோனியா காந்தி
விளக்கம்: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதையை 544 பக்க புத்தகமாக எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
Q161தில்லி காவல்துறை வரம்பு மீறல் புகார் குறித்து ஆராய யாருடைய தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது?
சரியான விடை: D. நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி
விளக்கம்: தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து தில்லியில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையின் வரம்பு மீறல் புகார் குறித்து ஆராய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி தலைமையில் 5 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
Q162சிங்கப் பெண் கடன் திட்டம் எத்தனை கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது?
சரியான விடை: C. ரூ.7,015 கோடி
விளக்கம்: பெண்களை தொழில் முனைவோராக்க புதிதாக சிங்கப் பெண்கள் கடன் திட்டம் ரூ.7,015 கோடியில் கூட்டுறவு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும்.
Q163சமீபத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டது?
சரியான விடை: D. இந்தியா - ஜப்பான்
விளக்கம்: தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதிகளில் சீனா தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவும் ஜப்பானும் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
Q164சமீபத்தில் தேசியவாத கட்சியின் மூத்த தலைவரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?
சரியான விடை: A. வங்கதேசம்
விளக்கம்: அண்டை நாடான வங்கதேசத்தின் 23-ஆவது அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Q165மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20, எந்த ஆண்டிலிருந்து நல்லிணக்க தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது?
சரியான விடை: B. 1992
விளக்கம்: ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20 நல்லிணக்க தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Q166விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
சரியான விடை: D. ஆகஸ்ட் 20
விளக்கம்: விடுதலைப் போராட்டத்தின் தொடக்கக் கால வீரர்களில் ஒருவரும், மாவீரர் பூலித்தேவரின் படைத்தளபதியுமான மாவீரன் ஒண்டிவீரன் நினைவு தினம் ஆகஸ்ட் 20-இல் அனுசரிக்கப்படுகிறது.
Q1672026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களில் ஒருவரான எம்.தங்கராஜ் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?
சரியான விடை: A. தென்காசி
விளக்கம்: இவர் தமிழகத்தின் தென்காசி மாவட்டம், புளியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
Q1682026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ.அமுதா எந்த ஊரைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணியாற்றுகிறார்?
சரியான விடை: B. மதுரை
விளக்கம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி பிரிவில் மதுரை பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் ஜெ.அமுதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Q1692026 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் யார்?
சரியான விடை: B. எஸ்.கணேசன்
விளக்கம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.கணேசன் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தியாகி ஆர்.சீனிவாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார்.
Q170'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் எப்போது தொடங்கப்படவுள்ளது?
சரியான விடை: B. செப்டம்பர் 15
விளக்கம்: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
Q171ரூ.1.50 கோடியில் அம்மைவார்த்தவர்கள் தங்கும் மண்டபம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
சரியான விடை: B. சேலம்
விளக்கம்: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உப கோயிலான அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ளது.
Q172கூற்று 1: காவிரி தங்கம் - புரோ வைட்டமின் ஏ அதிகம் கொண்டது.
கூற்று 2: காவிரி நாடன் - பச்சை நாடன் வகையைச் சேர்ந்தது. 100 விழுக்காடு உயர்மகசூல் ரகம்.
சரியான விடை: A. கூற்று 1, 2 சரி
விளக்கம்: திருச்சி மாவட்டம் தாயனூரில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 33-ஆவது நிறுவன நாள் விழாவில் காவிரி தங்கம் மற்றும் காவிரி நாடன் என்ற 2 புதிய வாழை ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
Q173சமீபத்தில் காலமான பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி அவர்களுக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது எந்த ஆண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது?
சரியான விடை: C. 2022
விளக்கம்: கலைமாமணி விருது, நந்தி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
Q174மொரீஷியஸ் நாட்டின் மொத்த பெட்ரோலியத் தேவையை நிறைவு செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எத்தனை ஆண்டுகளுக்கான நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ளது?
சரியான விடை: B. 5 ஆண்டுகள்
விளக்கம்: இந்த ஒப்பந்தத்தின் படி மொரீஷியஸின் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் முழு இறக்குமதி தேவையையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பூர்த்தி செய்யும்.
Q175குளோர்பெனிரமைன் மேலியேட், பினைல்ப்ரின் ஹைட்ரோ குளோரைடு ஆகிய இரண்டும் கலவை மூலப்பொருட்களை எத்தனை வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சளி மருந்துகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது?
சரியான விடை: A. 4 வயதுக்குட்பட்ட
விளக்கம்: இந்த கலவைகளின் பயன்பாடு நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருப்பதால் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Q176நீதி ஆயோக்கின் அறிக்கைப்படி, இந்தியாவில் படிக்காமலும், வேலை செய்யாமலும் உள்ள 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
சரியான விடை: C. 8.7 கோடி
விளக்கம்: 2021 இல் நடத்தப்பட்ட 78-ஆவது தேசிய மாதிரி ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
Q177வரலாற்றுச் சிறப்புமிக்க கோர்கா ஒப்பந்தம் எந்த ஆண்டில் கையெழுத்தானது?
சரியான விடை: D. 1988
விளக்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளைக் கொண்டு கோர்காலாந்து எனும் தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Q178யு.20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற நாடு எது?
சரியான விடை: B. ஸ்பெயின்
விளக்கம்: இப்போட்டியில் இந்தியாவின் மான்ஸி லேதர் வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிர் 57 கிலோ எடைப் பிரிவில் தன்வியும், 59 கிலோ எடைப் பிரிவில் கோமலும் வெண்கலம் வென்றனர்.
Q179உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய இணைஜோடி எது?
சரியான விடை: A. காயத்ரி கோபிசந்த் - டிரீசா ஜாலி
விளக்கம்: புது தில்லியில் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.
Q180பிஎன்ஜி பயன்பாட்டை விரைந்து அதிகரிக்க 1955 ஆம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் — பிரிவின் கீழ் எல்பிஜி கட்டுப்பாட்டு உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன?
சரியான விடை: B. பிரிவு 3
விளக்கம்: 3-ஆவது பிரிவின் கீழ் எல்பிஜி கட்டுப்பாட்டு உத்தரவுகள், 2026 ஆம் ஆண்டுக்கான இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோக உத்தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Q18125 ஆவது இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை கூட்டம் எங்கு நடைபெற்றது?
சரியான விடை: B. சீனா
விளக்கம்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
Q182தமிழகத்தின் 2 ஆவது யூதக் கல்வெட்டு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
சரியான விடை: D. கிருஷ்ணகிரி
விளக்கம்: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஆனந்தூரில் தமிழகத்தின் 2 ஆவது யூதக் கல்வெட்டை வரலாற்று ஆர்வலர்கள் கண்டெடுத்தனர். இக்கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
Q183இதுவரையில் தமிழகத்தில் யூதர்கள் குறித்த கல்வெட்டு எந்த ஊரில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது?
சரியான விடை: C. இராமநாதபுரம்
விளக்கம்: இதுவரை தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை அடுத்த வாலாந்தரவை என்ற ஊரில் மட்டுமே யூதர்கள் குறித்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
Q184எந்த மாநிலத்தில் அமைந்துள்ள ஜோஷிமட் என்ற நகரமே புதையக்கூடிய அபாயத்தைச் சந்தித்து வருகிறது?
சரியான விடை: A. உத்தரகண்ட்
விளக்கம்: இமயமலை அடிவாரத்தில் உள்ள 'தேவபூமி'யான உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடற்ற கட்டுமானங்களால் நிலச்சரிவு என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
Q185கிரேட்டர் மாலி இணைப்புத் திட்டம் எந்த நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது?
சரியான விடை: D. A & B
விளக்கம்: இத்திட்டம் திலமாலி பாலத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் டாலர் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து 100 மில்லியன் டாலர் நிதியுதவியில் மேற்கொள்ளப்படுகிறது.
Q186தேசிய விண்வெளி தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
சரியான விடை: C. ஆகஸ்ட் 23
விளக்கம்: 2023 ஆகஸ்ட் 23 இல் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய வரலாற்றுச் சாதனையை நினைவுகூரும் நோக்கில் கொண்டாடப்படுகிறது.
Q187தில்லியில் நிகழாண்டு எத்தனை H1N1 பாதிப்புகள் பதிவாகியுள்ளன?
சரியான விடை: C. 1,777
விளக்கம்: ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் புதிய வகை எதுவும் நாட்டில் கண்டறியப்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Q188உலகின் கப்பல் கட்டுமான மையமாக மாறும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று தெரிவித்தவர் யார்?
சரியான விடை: A. ராஜ்நாத் சிங்
விளக்கம்: இவர் கார்டன் ரீச் கப்பல் கட்டுமான நிறுவனம் மற்றும் என்ஜினீயர்ஸ், யந்திரா இந்திய நிறுவனத்தின் 5 விரிவாக்கத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
Q189உசைன் போல்டின் 100மீ சாதனையை முறியடித்த சீன ரோபோ எது?
சரியான விடை: C. அட்லஸ்
விளக்கம்: ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் படைத்த 100 மீ ஓட்டப்பந்தய உலக சாதனையை சீனாவைச் சேர்ந்த மனித உருவ ரோபோ சாதனையை முறியடித்துள்ளது.
Q190'அன்னபூரணி தப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு எத்தனை விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படவுள்ளது?
சரியான விடை: B. 3
விளக்கம்: 2027 பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வரும். 1.30 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன.
Q191பொருத்துக: பிற மாநிலங்களில் சிலிண்டர் மானியம்:
1) ஆந்திரா — அந்தியோதயா திட்டம் - 3 சிலிண்டர்
2) உத்தரப் பிரதேசம் — முதல்வரின் அன்னபூரணி யோஜனா திட்டம் - 3 சிலிண்டர்
3) மகாராஷ்டிரா — உஜ்வாலா திட்டம் - 2 சிலிண்டர்
4) உத்தரகண்ட் — தீபம் திட்டம் - 3 சிலிண்டர்
சரியான விடை: A. 4321
விளக்கம்: PDF-ல் கொடுக்கப்பட்ட பொருத்துகையின் சரியான விடை A எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Q192'வெற்றி பயணம்' திட்டம் எப்போது செயல்படுத்தப்படவுள்ளது?
சரியான விடை: B. அக்.2
விளக்கம்: வெற்றி பயணத் திட்டத்தின் கீழ் புறநகர் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். இத்திட்டம் காந்தி ஜெயந்தி நாளான அக்.2 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
Q193நாசாவின் முதல் பெண் நிர்வாக அதிகாரியும் 'ஹப்பிளின் தாய்' என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வானியலாளர் யார்?
சரியான விடை: A. நான்சி கிரேஸ் ரோமன்
விளக்கம்: ரோமன் ஒரு அகச்சிவப்பு விண்வெளித் தொலைநோக்கி. இதன் முதன்மைக் கண்ணாடி 2.4 மீட்டர் விட்டம் கொண்டது. இது ஹப்பிளின் கண்ணாடி அளவுக்குச் சமமானது.
Q194'திறன் ப்ளஸ்' திட்டம் எத்தனை கோடி ஒதுக்கீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது?
சரியான விடை: B. 12.05 கோடி
விளக்கம்: அரசுப் பள்ளிகளில் 2 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வகுப்பு நிலைக்கேற்ப எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் 10.5 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Q195இந்தியாவில் யுபிஐ சேவை எந்த ஆண்டு அறிமுகமானது?
சரியான விடை: A. 2016
விளக்கம்: 2016 ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகமானது. ஒரு நாளைக்கு சராசரியாக 66 கோடி பரிவர்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது 11 நாடுகளில் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது.
Q196தமிழக அரசின் சார்பில் எத்தனை தமிழர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
சரியான விடை: C. 5
விளக்கம்: கே. ஜீவ பாரதி, ராஜ் கெளதமன், சாரணபாஸ்கரன் என்கிற டி.எம்.எம்.அகமது, சா.கந்தசாமி, டி.எம். பீர்முகமது ஆகிய 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்.
Q197திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
சரியான விடை: A. தேனி
விளக்கம்: ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
Q198'ரேபிஸ் இல்லா தமிழ்நாடு' எத்தனை கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது?
சரியான விடை: D. ரூ.107 கோடி
விளக்கம்: தெரு நாய்களால் பரவும் ரேபிஸ் பாதிப்பைத் தடுக்கவும், தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், அறுவை சிகிச்சை மையங்களை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அமைக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
Q199மத்திய அரசின் பாவ்யா தொழில் மையங்கள் அமைக்க தமிழகத்தில் எத்தனை இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன?
சரியான விடை: A. 7
விளக்கம்: தென்கொரியா நிறுவனம் தமிழகத்தில் ரூ.300 கோடிக்கு தொழில் தொடங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Q200'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான அரசமைப்பின் 129 ஆவது திருத்த மசோதாவை பி.பி.செளதரி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு எந்த ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகிறது?
சரியான விடை: B. 2023
விளக்கம்: 2023 டிசம்பர் 19 முதல் ஆய்வு செய்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.