ஆகஸ்ட் 2026 – CURRENT AFFAIRS
Part 5 | Questions 201–233 | TNPSC Group 2 & Group 4
Q201ஓர் அரியவகை ரத்த உறைதல் குறைபாட்டு நோய் எது?
சரியான விடை: C. ஹிமோபிலியா
விளக்கம்: ஃபேக்டர் 8 இன் இன்ஹிபிட்டர் ஆன்டிபாடி உருவாகியுள்ள ஹிமோபிலியா-ஏ மருத்துவப் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படும் மருந்து எமிசிஜுமாப். இந்த மருந்தை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Q202செயற்கை மழைத் திட்டத்தை செயல்படுத்த எந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது?
சரியான விடை: A. கர்நாடக அரசு
விளக்கம்: கர்நாடகத்தில் மழை குறைபாட்டை சமாளிக்க செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
Q203சப்த தாரா செயல்திட்டத்தில் 5 ஆவது அம்சமாக எந்தத் துறையைக் குறிப்பிட்டுள்ளது?
சரியான விடை: D. பாதுகாப்புத் துறை
விளக்கம்: உள்நாட்டு பாதுகாப்புத் தொழில் துறையினருக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட வழக்கமான ஏவுகணைகள் சார்ந்த தொழில்நுட்பங்களை வழங்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
Q204'நிபுண்' ஆழ்கடல் உதவிக் கப்பலை உருவாக்கிய நிறுவனம் எது?
சரியான விடை: C. ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம்
விளக்கம்: கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவியாக ஆழ்கடல் மீட்பு உள்ளிட்ட பாதுகாப்புப் பணியில் நிபுண் ஆழ்கடல் உதவிக் கப்பல் ஈடுபட்டுள்ளது.
Q205'வெற்றித் தமிழகம் ஆழ்நிலைத் தொழில்நுட்பப் புத்தாக்க நிதியம்' எத்தனை கோடியில் செயல்படுத்தப்படுகிறது?
சரியான விடை: A. ரூ.50 கோடி
விளக்கம்: சென்னை மற்றும் கோவையில் 'வெற்றி தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள்' தனியார் கூட்டாண்மையுடன் ஏற்படுத்தப்படும்.
Q206பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமல் 500 அரசு சேவைகளைக் கைபேசியில் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன?
சரியான விடை: B. ஸ்மார்ட் தமிழ்நாடு செயலி
விளக்கம்: இச்செயலி ரூ.5 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் ஆலோசனைகளை அரசுடன் பகிரும் வகையில் ரூ.1 கோடியில் வெற்றித் தமிழ்நாடு இணையதளம் ஏற்படுத்தப்படும்.
Q207தமிழகத்தில் எத்தனை கோடி ஒதுக்கீட்டில் சுரங்க கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம் அமைக்கப்படுகிறது?
சரியான விடை: A. ரூ.2 கோடி
விளக்கம்: சுரங்கத் துறையில் ஒருங்கிணைந்த மின்னணு கனிம மேலாண்மை தளம் அமைக்கப்படும்.
Q208சமீபத்தில் தாவர புதை வடிவ பூங்கா எங்கு அமைக்கப்படுகிறது?
சரியான விடை: D. காஞ்சிபுரம்
விளக்கம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், குண்டுபெரும்பேடு வெள்ளரை கிராமங்களில் ஏரியில் 60 கோடி ஆண்டுகள் பழைமையான தாவரப் புதை படிமங்களை பாதுகாக்க இந்தப் பூங்கா அமைக்கப்படுகிறது.
Q209உலகின் முதல் அணுசக்தியால் இயங்கும் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் எங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது?
சரியான விடை: A. தமிழ்நாடு
விளக்கம்: ஹைட்ரஜன்தான் எதிர்காலத்தின் எரிபொருள். தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஆகஸ்ட் 26 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Q210ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) அமைப்பு மாநாடு எங்கு நடைபெறுகிறது?
சரியான விடை: D. கிர்கிஸ்தான்
விளக்கம்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கேக்கில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது.
Q211'க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் முறை' எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
சரியான விடை: B. 2017
விளக்கம்: 2016 இல் டிசம்பரில் 'பீம்' செயலி அறிமுகமானது.
Q212யுபிஐ சேவையின் அடுத்தகட்ட பாய்ச்சலாக 'யுபிஐ 2.0' எப்போது தொடங்கியது?
சரியான விடை: C. 2018
விளக்கம்: 'ஆட்டோ டெபிட்' வசதி யுபிஐ-யில் அறிமுகமானது.
Q213சமீபத்தில் எந்த நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது?
சரியான விடை: C. இத்தாலி
விளக்கம்: நேபாள - திபெத் எல்லையில் உள்ள மலைப் பகுதியில் நிலவிய நிலையற்ற தன்மையால் பனிப் பாறைகள் சரிந்து லெண்டே கோலா நதிக்குள் முதலில் விழுந்தன. இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு உருவாகியுள்ளது. அந்த வெள்ளப் பெருக்கு கோஹி ஆறு வழியே திரிசூலி ஆற்றுக்குள் வந்துள்ளது. இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Q214திரு.வி. கலியாணசுந்தரனாரின் பிறந்த தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
சரியான விடை: D. ஆகஸ்ட் 26
விளக்கம்: தமிழ்த்தென்றல் என அழைக்கப்படும் திரு.வி.க. வின் 143 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
Q215சஹ்யோக் ஹாப்-டாக் எனும் கூட்டு கடல்சார் பயிற்சியை எந்த இரு நாடுகள் இணைந்து நடத்தின?
சரியான விடை: A. இந்தியா - வியட்நாம்
விளக்கம்: இந்தியா - வியட்நாம் கடலோரக் காவல் படைகள் இணைந்து நடத்திய இந்தக் கூட்டுப்பயிற்சி சென்னையில் நிறைவடைந்தது.
Q216தேசிய விளையாட்டு தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
சரியான விடை: C. ஆகஸ்ட் 29
விளக்கம்: கேலோ இந்தியா - பிரதமருடன் கலந்துரையாடல் என்ற தலைப்பில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Q217உலக அளவில் மொத்த மின் உற்பத்தி அடிப்படையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
சரியான விடை: C. மூன்றாமிடம்
விளக்கம்: அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியாவின் மின் உற்பத்தி சுமார் 1800 டெராவாட் ஹவராக இருக்கிறது.
Q218உலக அளவில் _____க்கும் மேற்பட்ட நாடுகள் புவி வெப்பக் கிணறுகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்கின்றன?
சரியான விடை: D. 35
விளக்கம்: கென்யா நாட்டின் மொத்த மின்சார தேவையில் 45% புவி வெப்பக் கிணறுகள் மூலமே பெறப்படுகின்றன.
Q219இந்தியா 'ஜாவ்லின்' ஏவுகணை அமைப்புகளை எந்த நாட்டிலிருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
சரியான விடை: A. அமெரிக்கா
விளக்கம்: இது இந்திய ராணுவத்தின் போர்த் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் பீரங்கியை பின்தொடர்ந்து சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை ஆகும்.
Q220இந்தோ - ஜெர்மன் எம்.எஸ்.எம்.இ மாநாடு எங்கு நடைபெற்றது?
சரியான விடை: C. சென்னை
விளக்கம்: இந்த மாநாட்டில் இந்தியா ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
Q221மத்திய அரசின் ஜன்தன் (மக்கள் நிதி) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
சரியான விடை: D. 2014
விளக்கம்: மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான ஜன்தன் திட்டம் 2014 ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இதன் வங்கிக் கணக்குகள் 2026 இல் ரூ.59 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
Q222கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர் யார்?
சரியான விடை: B. டி.குகேஷ்
விளக்கம்: அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 4 பைனல்ஸ் செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
Q223ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) அமைப்பில் இந்தியா முழு நேர உறுப்பினராக இணைந்த ஆண்டு எது?
சரியான விடை: D. 2017
விளக்கம்: 2001 இல் சீனா ஷாங்காயில் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. தற்போது 26-ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கேக்கில் நடைபெற்றது.
Q224ஸ்வநிதி திட்டத்தில் எத்தனை சதவீத பெண் பயனாளிகள் உள்ளனர்?
சரியான விடை: C. 46%
விளக்கம்: தெருவோர வியாபாரிகளுக்கு நிதி ரீதியில் ஆதரவளிக்கும் இத்திட்டத்தில் 46% பெண் பயனாளிகளாவர்.
Q225எந்தத் திட்டத்தின் மூலம் 12000 மாணவிகளுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விண்வெளி சார் புத்தாக்கங்கள் குறித்து கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது?
சரியான விடை: B. சக்திசாட் திட்டம்
விளக்கம்: இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 108 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12000 மாணவிகளை ஒருங்கிணைக்கும் திட்டமாகும். இந்த மாணவிகளால் உருவாக்கப்படும் செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த முன்னெடுப்பின் இலக்கு ஆகும்.
Q226எந்த நாட்டின் உயரிய விருதான 'தோஸ்திலிக்' விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது?
சரியான விடை: C. உஸ்பெகிஸ்தான்
விளக்கம்: 'உயர்ந்த நட்புக்கான விருது' எனப் பொருள்படும் தோஸ்திலிக் விருதை 140 கோடி இந்திய மக்களுக்கு சமர்பிக்கிறேன் என்று பிரதமர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Q227எந்த ஆண்டில் ஐரோப்பா யூனியனில் ஐஸ்லாந்து சேர திட்டமிட்டிருந்தது?
சரியான விடை: A. 2027
விளக்கம்: தற்போது அந்தத் திட்டத்தை ஐஸ்லாந்து மக்கள் நிராகரித்து விட்டனர்.
Q228புதிய மீத்திறன் அனல் மின் உற்பத்தி நிலையம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
சரியான விடை: A. தூத்துக்குடி
விளக்கம்: தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் அமையவுள்ளது.
Q229தமிழகத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா எங்கு அமையவுள்ளது?
சரியான விடை: C. காஞ்சிபுரம்
விளக்கம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்திப் பூங்கா ரூ.175 கோடியில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படவுள்ளது.
Q230தமிழகத்தில் புதிய எண்ம நிதி மையம் எங்கு அமைக்கப்படவுள்ளது?
சரியான விடை: D. கோயம்புத்தூர்
விளக்கம்: நிதி தொழில்நுட்ப பின்டெக் புதுமைகளுடன் எண்ம நிதி சேவைகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் கோவையில் எண்ம நிதி மையம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.400 கோடியில் அமையவுள்ளது.
Q231உலகில் அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
சரியான விடை: B. இரண்டாமிடம்
விளக்கம்: உலகளாவிய மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 8% ஆகும்.
Q232'செமிகான் 2.0 திட்டத்துக்கு மத்திய அரசு எப்போது ஒப்புதல் அளித்தது?
சரியான விடை: A. ஜூலை 15
விளக்கம்: ரூ.1.27 கோடி செமிகான் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்சார்பு மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய தொழில்துறையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
Q233இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு (2026-27) நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் எத்தனை சதவீதமாக உயர்ந்துள்ளது?
சரியான விடை: D. 7.8%
விளக்கம்: நடப்பு நிதியாண்டு முழுமைக்கும் நாட்டின் பொருளாதாரம் 6.7% வளர்ச்சியை எட்டும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.