ஆகஸ்ட் 2026 – CURRENT AFFAIRS
Part 3 | Questions 101–150 | TNPSC Group 2 & Group 4
Q101உலக யானைகள் விழிப்புணர்வு தினம் என்று கடைப்பிடிக்கப்படுகிறது?
சரியான விடை: D. ஆகஸ்ட் 12
விளக்கம்: யானைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். 2023-ஆம் ஆண்டு யானைகள் எண்ணிக்கை கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் 2961 யானைகள் உள்ளன.
Q102போதைப் பொருள் தடுப்புப் படைக்காக தமிழகம் முழுவதும் எத்தனை காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன?
சரியான விடை: B. 65
விளக்கம்: அதிகபட்சமாக சென்னை பெருநகர காவல்துறையில் 12 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதைப் பொருள் தடுப்புக்கு ரூ.264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Q103மத்திய உயர்கல்வித் துறையின் புதிய செயலராக நியமிக்கப்பட்டவர் யார்?
சரியான விடை: A. தீப்தி கெளர் முகர்ஜி
விளக்கம்: மத்தியப் பிரதேசப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான தீப்தி தற்போது மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறைச் செயலராக உள்ளார்.
Q104இந்தியாவில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை (FCRA) சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
சரியான விடை: A. 1976
விளக்கம்: இம்மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
Q105புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்யுமாறு எத்தனை மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது?
சரியான விடை: B. 19
விளக்கம்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிந்து முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அறிவித்துள்ளது.
Q106எந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை பாலிமர் மூலம் அச்சிட்டு வெளியிட மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளது?
சரியான விடை: C. ரூ.10 & ரூ.20
விளக்கம்: மொத்தம் 100 கோடி என்ற எண்ணிக்கையில் பாலிமர் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படவுள்ளன.
Q107நிலவின் தென் துருவத்திற்கு அருகில் வசிப்பிடத்தை அமைக்கும் தள லட்சியத் திட்டத்தில் இஸ்ரோ எந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது?
சரியான விடை: B. அமெரிக்கா ஆய்வு நிறுவனம்
விளக்கம்: அமெரிக்கா ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து செயல்படுகிறது. நிலவு ஆராய்ச்சித் தள திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் தங்கி ஆய்வுகள் மற்றும் பிற பணிகளை மேற்கொள்ள வசதியாக நிலவின் தென் துருவத்துக்கு அருகே நிரந்தர வசிப்பிடத்தை அமைக்க ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின் படி நாசா திட்டமிட்டுள்ளது.
Q108மொரீசியஸ் நாட்டின் உலகத் தமிழர் பொருளாதார உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் யார்?
சரியான விடை: D. நவின் சந்திர ராம்கூலம்
விளக்கம்: உலகத் தமிழர் பொருளாதார 13-ஆவது மாநாடு மொரீசியஸ் நாட்டில் செப்.11 முதல் செப்.13 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை அந்நாட்டின் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம் தொடங்கி வைத்தார்.
Q1092025-26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) உலகின் எத்தனையாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது?
சரியான விடை: B. 6 ஆவது
விளக்கம்: 3.92 ட்ரில்லியன் டாலருடன் உலகின் 6 ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
Q110பிரதமரின் மின்சார வாகனப் புரட்சித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
சரியான விடை: C. 2024
விளக்கம்: ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்தது. மின்சார வாகனத்துக்கான ஊக்கத்தொகை திட்டம் 2028 மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
Q1112026 ஆம் ஆண்டுக்கான உலக சர்ஃபிங் லீக் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
சரியான விடை: A. மாமல்லபுரம்
விளக்கம்: 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியை தமிழக அரசு விளையாட்டுத் துறை செயலாளர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
Q112சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்த மசோதா 2026, எந்த சட்டத்தின் கீழ் திருத்தம் மேற்கொண்டுள்ளது?
சரியான விடை: B. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957
விளக்கம்: கனிம உரிமைகள் மீது மாநில அரசுகள் கூடுதல் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் நோக்கில் இம்மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
Q113வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு எங்கு நடைபெற்றது?
சரியான விடை: D. சென்னை
விளக்கம்: ஆகஸ்ட் 13 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் 97 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
Q1142026 ஆம் ஆண்டுக்கான ஹாக்கி உலகக் கோப்பை போட்டி எங்கு நடைபெற்றது?
சரியான விடை: A. பெல்ஜியம் - நெதர்லாந்து
விளக்கம்: ஆடவர் மற்றும் மகளிருக்கான 16 ஆவது உலக ஹாக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது.
Q115தென்னிந்தியாவில் முதல் முறையாக டிஸ்யூ காகித வணிக உற்பத்தித் திட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
சரியான விடை: B. திருச்சி
விளக்கம்: திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டியில் ரூ.350 கோடியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
Q116இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிரகடனம் செய்து வரும் நாடு எது?
சரியான விடை: A. அமெரிக்கா
விளக்கம்: இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், பன்முகத்தன்மை மற்றும் அமெரிக்க சமூகத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பு வளர்ந்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையில் அமெரிக்கா மாகாணங்கள் பிரகடனம் செய்து வருகின்றன.
Q117நிதி மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
சரியான விடை: B. 2021
விளக்கம்: எண்ம மோசடிகளைத் தடுக்க, உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஐ4சி எனப்படும் தேசிய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் இணைய நிதி மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு 2021 இல் தொடங்கப்பட்டது.
Q118தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் ஏரோஹப் வளாகம் எங்கு திறந்து வைக்கப்பட்டது?
சரியான விடை: C. கோயம்புத்தூர்
விளக்கம்: காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகலில் ரூ.250 கோடியில் முதல்வர் திறந்து வைத்தார்.
Q119செயற்கையிழை ஓடுதளங்கள் அமைக்கப்படும் மாவட்டங்களில் பொருந்தாத மாவட்டம் எது?
சரியான விடை: C. கடலூர்
விளக்கம்: இராமநாதபுரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.38.24 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Q1202026-ஜூலை மாத சில்லறை பணவீக்கம் எத்தனை சதவீதமாக அதிகரித்துள்ளது?
சரியான விடை: D. 4.45%
விளக்கம்: சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4% வரம்பைக் கடப்பது இது 2 ஆவது முறையாகும்.
Q121தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினம் எந்த ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது?
சரியான விடை: A. 2021
விளக்கம்: தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Q122இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் ஜெனரல் யார்?
சரியான விடை: D. மிருத்யுஞ்ஜய் குமார்
விளக்கம்: 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய 16 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு தொடங்கியதால் ஒத்திவைக்கப்பட்டது.
Q1232047 ஆம் ஆண்டுக்குள் அணுமின் உற்பத்தி எத்தனை ஜிகா வாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
சரியான விடை: B. 100 GW
விளக்கம்: 2030 ஆம் ஆண்டுக்குள் புதிதாக 5 அணு உலைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Q1242047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க பிரதமர் நரேந்திர மோடியால் முன்மொழியப்பட்ட செயல் திட்டம் எது?
சரியான விடை: C. அம்ரித் காலம் திட்டம்
விளக்கம்: சப்த தாரா செயல்திட்டத்தின் மூலம் 7 துறைகளில் சீர்திருத்தங்களை வேகப்படுத்தி வலுப்படுத்துவதன் மூலம் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும்.
Q125'என் அன்புக்குரிய நாட்டு மக்களே' என்ற வாசகத்தை பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை பயன்படுத்தினார்?
சரியான விடை: A. 40 முறை
விளக்கம்: பிரதமர் தனது சுதந்திர தின உரையில் இளைஞர், இளைஞர் சக்தி எனப் பொருள்படும் வார்த்தைகளை 50 க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியுள்ளார்.
Q126சர்க்கரை நோய் சிகிச்சை துறையில் சிறந்து விளங்கிய வி.மோகனுக்கு வழங்கப்பட்ட விருது எது?
சரியான விடை: B. கல்பனா சாவ்லா விருது
விளக்கம்: டாக்டர் மோகன் சார்பாக அவரது மகள் டாக்டர் அஞ்சனா இந்த விருதைப் பெற்றார்.
Q127சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது பெற்றவர் யார்?
சரியான விடை: D. நெளவீன் பானு சந்த்
விளக்கம்: துணிவு மற்றும் சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது, கோவையைச் சேர்ந்த நவ்ஷினுக்கு வழங்கப்பட்டது.
Q128முதல்வரின் நல் ஆளுமை விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது?
சரியான விடை: C. செளமியா அன்புமணி
விளக்கம்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னிக்கு இந்த விருது மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும்.
Q129நிகழாண்டு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
சரியான விடை: C. வீரமணி
விளக்கம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுடன் ரூ.10 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
Q130பொருத்துக: தகைசால் விருது பெற்றவர்கள்:
1. 2022 — காதர் மொகிதீன்
2. 2023 — குமரி அனந்தன்
3. 2024 — வீரமணி
4. 2025 — நல்லகண்ணு
1. 2022 — காதர் மொகிதீன்
2. 2023 — குமரி அனந்தன்
3. 2024 — வீரமணி
4. 2025 — நல்லகண்ணு
சரியான விடை: A. 4321
விளக்கம்: முதலாவது தகைசால் விருது பெற்றவர் — என். சங்கரய்யா.
Q131பிரதமரின் கதி சக்தி (உத்வேகத் திட்டம்) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
சரியான விடை: B. 2021
விளக்கம்: 2021, அக்.13 ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ரூ.18.66 லட்சம் கோடி மதிப்பிலான 396 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Q132எத்தனை ஏழை குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது?
சரியான விடை: A. 20 லட்சம்
விளக்கம்: ஏழைகள் பயனடையும் வகையில் வீட்டுமனைப் பட்டா சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Q133தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
சரியான விடை: B. 1939
விளக்கம்: பொது சுகாதார அமைப்பின் அடித்தளமாக விளங்கி வரும் இச்சட்டம் இயற்றப்பட்டு 87 ஆண்டுகள் ஆகிவிட்டன.
Q134'தமிழ்நாடு மருத்துவ நகரம்' திட்டத்துக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
சரியான விடை: A. ரூ.10 கோடி
விளக்கம்: தமிழகத்தில் 70 வயதைக் கடந்த முதியோருக்கு வருமான உச்ச வரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
Q135இந்திய ராணுவ தலைமை தளபதி தீரஜ் சேத்துக்கு எந்த நாட்டு இராணுவத்தின் கௌரவ தளபதி பதவி வழங்கப்பட்டது?
சரியான விடை: B. நேபாளம்
விளக்கம்: இந்தியாவும் நேபாளமும் அடுத்த நாட்டு இராணுவ தலைமைத் தளபதிக்கு தங்கள் நாட்டு இராணுவத்தின் கௌரவ தளபதி பதவியை அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளன.
Q136இந்திய மருத்துவ முறை கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் எத்தனை கோடியில் நிறுவப்படவுள்ளது?
சரியான விடை: A. ரூ.1.03 கோடி
விளக்கம்: முதல் நிலை செயற்கை கருத்தரிப்பு மையம் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
Q137பள்ளி மாணவர்களுக்கு எத்தனை கோடி முதலீட்டில் யோகா திட்டம் நிறுவப்படவுள்ளது?
சரியான விடை: B. ரூ.1.60 கோடி
விளக்கம்: தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்துடன் இணைந்து வழங்க, 100 வட்டார அளவில் பள்ளி சுகாதாரத் திட்ட அலகுகள் ரூ.1.60 கோடியில் நிறுவப்படவுள்ளது.
Q138தமிழ்நாடு அரசு பள்ளி மாணவிகளுக்கு இரத்த சோகையைக் கண்டறிந்து தொடர்ந்து கண்காணிக்க தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் என்ன?
சரியான விடை: D. இரும்பு கண்மணி திட்டம்
விளக்கம்: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் பயிலும் சுமார் 16.5 லட்சம் வளரிளம் பருவ மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் ரூ.6.37 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.
Q139'நலம் - ஒருங்கிணைந்த இலவச உடல் நலப் பரிசோதனை' திட்டத்தின் கீழ் எத்தனை வகை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
சரியான விடை: B. 14
விளக்கம்: இதன் கீழ் ஆண்டுதோறும் 30 வயது மற்றும் அதைக் கடந்தவர்களுக்கு 14 வகையான உடல் நலப் பரிசோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
Q140கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு எத்தனை சதவீத மானியம் தள்ளுபடி செய்யப்படுகிறது?
சரியான விடை: D. 100%
விளக்கம்: மேலும் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரையிலான பயிர் கடன்களுக்கு ரூ.75,000 வரையும், ரூ.1,00,000 க்கும் மேல் பெற்ற பயிர் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார்.
Q141வருகையில்லா ஆவணப் பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
சரியான விடை: B. ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர்
விளக்கம்: தமிழகத்தில் உள்ள மனைப் பிரிவில் முதல் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களுக்கு பதிவுத் துறையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப் பதிவு கட்டாயமாக்கல் நடைமுறையை முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
Q142நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது?
சரியான விடை: C. 1968
விளக்கம்: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும் மாநிலங்களவையில் நிறைவேறாமல் காலாவதியானது.
Q143இந்தியாவில் முதல் முறையாக லோக் ஆயுக்த சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
சரியான விடை: D. 1971
விளக்கம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1971 ஆம் ஆண்டு லோக் ஆயுக்த சட்டத்தை இயற்றி லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவியது.
Q144ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட்ட ஆண்டு எது?
சரியான விடை: A. 2005
விளக்கம்: 2011 ஆம் ஆண்டு இந்தியா இந்த உடன்படிக்கையை அங்கீகரித்தது.
Q145லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தக்கள் சட்டம் நாடாளுமன்றத்தால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
சரியான விடை: C. 2013
விளக்கம்: தமிழ்நாடு லோக் ஆயுக்த சட்டம் 2018 இல் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பு செயல்படத் தொடங்கியது.
Q146எந்த மாநிலத்தில் மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது?
சரியான விடை: C. கர்நாடகா
விளக்கம்: தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்தப்படும் என மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவித்தார்.
Q147போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்குக் கற்றல் திறனை மேம்படுத்தி போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் உருவாக்கப்படும் செயலியின் பெயர் என்ன?
சரியான விடை: A. வெற்றிப் பாதை
விளக்கம்: எண்ம கற்றல் வசதிகள், நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்தச் செயலி ரூ.20 லட்சத்தில் உருவாக்கப்படும்.
Q1482020 இல் நிறுவப்பட்ட PM CARES (அவசர காலங்களில் குடிமக்களுக்கான பிரதமரின் உதவி மற்றும் நிவாரணம்) என்ற நிதியை நிறுவியவர் யார்?
சரியான விடை: A. நரேந்திர மோடி
விளக்கம்: பிரதமரை தலைவராகக் கொண்ட இந்த நிதிக்கு எவ்வித பட்ஜெட் ஒதுக்கீடும் கிடையாது. முழுவதும் நன்கொடைகளை மட்டுமே உள்ளடங்கியதாகும். 2024-25 உள்நாட்டு நன்கொடை ரூ.479 கோடியாக உள்ளது.
Q149தென் மாநில முதல்வர்கள் மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
சரியான விடை: B. கோவை
விளக்கம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறவுள்ளது.
Q150ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான 'ஒலிம்பிக் இல்லம்' எங்கு அமைக்கப்படவுள்ளது?
சரியான விடை: A. சென்னை
விளக்கம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மையம் - ஒலிம்பிக் இல்லம் சென்னையில் அமையவுள்ளது. தமிழ்நாடு கிராமிய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ரூ.42 கோடி செலவில் நடத்தப்படவுள்ளது.