9th New Tamil Book chapter 1.5 தொடர் இலக்கணம்

9th New Tamil Book chapter 1.5 தொடர் இலக்கணம்
: :
தொடர்-இலக்கணம் (9th New Tamil Book)
1. சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைத்த பெயர்சொல்லையே ----- என்கிறோம்? எழுவாய்
2. "மீனா கனகாம்பரத்தை சூட்டினால்"என்ற தொடரில் செயப்படுபொருள் எது? கனகாம்பரம்
3. தோன்றா எழுவாய்க்கு எகா? படித்தாய்
4. பெயர் பயனிலைக்கு எகா? சொன்னவள் கலா
5. வினா பயனிலைக்கு எகா? விளையாடுபவன் யார்?
6. ஒரு சொல்லானது எழுவாயாக வரும் பெயர்ச்சொல்லுக்கு அடையாக வருவது? பெயரடை எனப்படும்
7. பந்து உருண்டது என்பது? தன்வினை
8. உருட்டவைத்தான் என்பது என்ன? பிறவினை
9. எழுவாய் ஒரு வினையை செய்தால் அது? தன்வினை
10. எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது? பிறவினை
11. வி, பி, போன்ற விகுதிகள் கொண்டு செய், வை, பன்னு போன்ற துணை வினைகளை இணைந்தும் உருவாக்கப்படுவது? பிறவினை
12. அப்பா சொன்னார் என்பது? செய்வினைத், தொடர்
13. தோசை வைக்கப்பட்டது என்பது? செயப்பாடடுவினைத் தொடர்
14. செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை? செய்வினை
15. செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை? செயப்பட்டு வினை
16. அப்துல் நேற்று வந்தான் இது எவ்வகை தொடர்? தன்வினை தொடர்
17. அப்துல் நேற்று வருவித்தான் இது எவ்வகை தொடர்? பிறவினை
18. கவிதா உரை படித்தாள் இது எவ்வகை தொடர்? செய்வினைத் தொடர்
19. உரை கவிதாவால் படிக்கப்பட்டது இது எவ்வகை தொடர்? செயப்பாடடுவினை தொடர்
20. குமரன் மழையில் நனைந்தான் இது எவ்வகை தொடர்? உடன்பாடடுவினைத் தொடர்
21. குமரன் மழையில் நனையவில்லை இது எவ்வகை தொடர்? எதிர்மறைவினைத் தொடர்
22. என் அன்னன் நாளை வருவான் இது எவ்வகை தொடர்? செய்தித் தொடர்
23. எவ்வளவு உயரமான மரம் இது எவ்வகை தொடர்? உணர்ச்சி தொடர்
24. உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? இது எவ்வகை தொடர்? வினாத்தொடர்
25. பூக்களைப் பறிக்காதீர் இது எவ்வகை தொடர்? கட்டளைத் தொடர்
26. இது நாற்காலி, அவன் மாணவன் இது எவ்வகை தொடர்? பெயர்ப் பயனிலை தொடர்
27. பதம் (சொல்) எத்தனை வகைப்படும்? இரண்டு (பகுபதம், பகாப்பதம்)
28. பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ----- எனப்படும்? பகுபதம்
29. பகுபதம் எத்தனை வகைப்படும்? இரண்டு (பெயர்ப் பகுபதம், வினை பகுபதம்)
30. பகுபத உறுப்புகள் எத்தனை? ஆறு (பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்)
31. சொல்லின் இறுதியில் நின்று தினை, பால், என், இடம், காட்டுவதாக அமைவது? விகுதி
32. பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைப்பது? சந்தி
33. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது? சந்தி
34. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது? சாரியை
35. பகுதி, விகுதி இடைநிலை சார்ந்து வருவது? சாரியை
36. பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து? எழுத்துப்பேறு ஆகும்