9th New Tamil Book chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம்

9th New Tamil Book chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம்
: :

திராவிட-மொழிக்குடும்பம் (9th New Tamil Book)
1. திராவிட மொழிகளுக்குள் மூத்த மொழியாய் விளங்குவது? தமிழ்
2. தமக்கு தோன்றிய கருத்துக்களை பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி எது? மொழியாகும்
3. மனிதன் தமக்கு தோன்றிய எண்ணங்களை எதன் மூலம் பிறருக்கு தெரிவிக்க முயன்றான்? மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஓவியங்கள்
4. இந்தியால் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 1300க்கு மேற்பட்டது
5. இந்தியாவில் உள்ள மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாக பிரிக்கப்பட்டடுள்ளன? நான்கு (4)
6. இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலையாக"திகழ்கிறது எனக் கூறியவர் யார்? ச. அகத்தியலிங்கம்
7. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்? குமரிலபட்டர்
8. தமிழ் என்னும் சொல்லிலிருந்து தான்"திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்? ஸீராஸ் பாதிரியார்
9. ஸீராஸ் பாதிரியார் தமிழிருந்து தான் திராவிட என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு விளக்கியுள்ளார்? தமிழ், தமிழா, தமிலா, டிரமிலா, ட்ராமிலா, த்ராவிடா, திராவிடா
10. 18ம் நூற்றாண்டு தொடக்கம் வரை, தமிழ் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் ----- மொழியிலுருந்து உருவானவை என்ற கருத்து நிலவியது? சம்ஸ்கிருத மொழி
11. வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது என்று குறிப்பிட்டவர் யார்? அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
12. ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்? அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்
13. 1816ஆண்டு மொழி சார்ந்த பல ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்? பாப், ராஸ்க், கிரிம்
14. முதன் முதலில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளுக்கு தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார்? பிரான்ஸ் எல்லிஸ்
15. தென்னிந்திய மொழிகளுக்கு தமிழியன் என்று பெயரிட்டவர் யார்? ஸோக்கன்
16. தமிழியன் மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகள் எவை? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தோண்டி, தோடா
17. தமிழ் மொழி ஆரிய மொழிகளிலிருந்து மாறுபட்டவை என்ற கருத்தை கூறிய அறிஞர்கள் யார்? ஸோக்கன் மற்றும் மாக்ஸ் முல்லர்
18. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கால்டுவெல்
19. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை வெளியிட்ட ஆண்டு? 1856
20. திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சம்ஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியுள்ளது என கூறியவர்? கால்டுவெல்
21. திராவிட மொழிக் குடும்பங்களின் வகைகள் எத்தனை? மூன்று அவை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள்
22. தென்திராவிட மொழிகள் எவை? தமிழ், கன்னடம், மலையாளம், குடகு, துளு கோத்தா, தோடா, கொரகா, இருளா
23. நடுத்திராவிட மொழிகள் எவை? தெலுங்கு, கூயி, கூவி, கோண்டா கோலாமி நாய்க்கி, பெங்கோ, மண்டா, பர்ஜி, கதபா, கோண்டி, கோயா
24. வடதிராவிட மொழிகள் எவை? பிராகுயி, குருக், மால்தோ
25. அண்மையில் கண்டறியப்பட்ட திராவிட மொழிகள் எவை? எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா
26. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை? 28
27. கண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? தமிழ்
28. கண்ணு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? மலையாளம், கன்னடம்
29. கன்னு என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? தெலுங்கு, குடகு
30. ஃகண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? குருக்
31. கென் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? பர்ஜி
32. கொண் என்ற அடிச்சொல் எத்திராவிட மொழியில் இடம் பெற்றுள்ளது? தோடா
33. மூன்று என்ற எண்ணுப் பெயர் மூணு என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? மலையாளம்
34. மூன்று என்ற எண்ணுப் பெயர் "மூரூ" என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? கன்னடம்
35. மூன்று என்ற எண்ணுப் பெயர் "மூஜி" என எம்மொழியில் குறிப்பிடப்படுகிறது? துளு
36. எந்த மொழியில் தினை, பால், என் ஆகிய வேறுபாட்டை காட்டுவதில்லை? ஆங்கிலம்
37. திராவிட மொழியில் எந்த மொழியில் பால் காட்டும் விகுதிகள் இடம் பெறுவதில்லை? மலையாளம்
38. கவிராஜ மார்க்கம் எனும் கன்னட மொழி இலக்கியம் இயற்றப்பட்ட நூற்றாண்டு? பொ. ஆ. ஒன்பதாம் நூற்றாண்டு
39. பொ. ஆ. 11ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட "பாரதம்" என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? தெலுங்கு
40. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ராம சரிதா'என்ற இலக்கியம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? மலையாளம்
41. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்ட நூற்றாண்டு? பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டு
42. பொ. ஆ. 9ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'கவிராஜ'மார்க்கம் என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? கன்னடம்
43. பொ. ஆ. 12ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'ஆந்திர பாஷா பூஷணம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? தெலுங்கு
44. பொ. ஆ. 15ம் நூற்றாண்டு இயற்றப்பட்ட 'லீலா திலகம்'என்ற இலக்கணம் எந்த மொழியில் இயற்றப்பட்டது? மலையாளம்
45. தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலின் ஆசிரியர் யார்? மு. வரதராசனார்
46. 'இந்திய இலக்கண கொள்கையின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? செ. வை, சண்முகம்
47. எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது? மொரீசியஸ், இலங்கை
48. ஒன்று என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில் ----- என்ற கூறப்படுகிறது? ஒன்சி
49. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை ----- மொழியில் அமைந்துள்ளன? தமிழ்
50. எந்த மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப் பாதுகாத்து வருகிறது? தமிழ் மொழி