10th தமிழ் இயல் 6.3 முத்துக்குமாரசாமி-பிள்ளைத்தமிழ்

1. முத்துக்குமாரமசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் யார்? குமரகுருபரர்
2. குழந்தையின் தலை அசைத்தலுக்கும் சந்தம் அமைத்து தருவது எது? பிள்ளைத்தமிழ்
3. "செம்போ நடிச்சிறு கிங் கினியோடு சிலம்பு கலந்தாட" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்? முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
4. பண்டி என்பதன் பொருள் என்ன? வயிறு
5. அசும்பிய என்பதன் பொருள் என்ன? ஒளி வீசுகிற
6. மூச்சி என்பதன் பொருள் என்ன? தலையுச்சிக் கொண்டை
7. செங்கீரைச்செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலையின் 5 - 6 ஆம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை ----- என்பர்? செங்கீரைப் பருவம்
8. சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாய் சுவரோவியம் எங்கு உள்ளது? சிதம்பரம் 17 - ஆம் நூற்றாண்டு
9. சிற்றிலக்கியம் எத்தனை வகைப்படும்? 96
10. பிள்ளைத்தமிழ் எந்த வகை இலக்கியம்? சிற்றிலக்கியம்
11. இறைவனையோ, தலைவரையோ, அரசனையோ பாட்டுடைய தலைவனாக கொண்டு அவரை குழந்தையாக கருதி பாடுவது? முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
12. பாட்டுடை தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புவது எது? பிள்ளைத்தமிழ்
13. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்? ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பார் பிள்ளைத்தமிழ்
14. பிள்ளைத்தமிழ் எத்தனை பாடல்களால் ஆனது? 100பாடல்கள், 10 பருவம், பருவத்திற்கு 10 பாடல்கல்
15. குமரகுருபரின் காலம் என்ன? 17 - ஆம் நூற்றாண்டு
16. குமரகுருபரர் எந்த மொழியில் புலமை பெற்றவர்? தமிழ், வடமொழி, இந்துஸ்தானி
17. குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை? கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரை கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை
18. இருபாலருக்கும் பொதுவான பருவங்கள் யாவை? காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
19. ஆண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் பருவங்கள் யாவை? சிற்றில், சிறுபறை, சிறுதேர்
20. பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள் யாவை? கழங்கு, அம்மானை, ஊசல்